हिन्दी  বাংলা  தமிழர்  اردو  తెలుగు  ಕನ್ನಡ  ਪੰਜਾਬੀ
Search
BBCTamil.com | முகப்பு | Tamil News index | Dinamalar.com |ஜூலை 30,2010 |

 •  "இந்திய பிரட்டன் வர்த்தகம் இரட்டிப்பாகும்"
பிரிட்டனுக்கும் இந்தியாவுக்கும் இடையிலான வர்த்தகத்தை அடுத்த ஐந்து ஆண்டுகளில் இரண்டு மடங்காக உயர்த்துவதற்கு, இரு நாட்டு பிரதமர்களுக்கிடையில் புதிய ஒப்பந்தம் ஒன்று ஏற்பட்டுள்ளது
 
 •  கோஹினூர் கோரிக்கை நிராகரிப்பு
பிரிட்டிஷ் அரச குடும்பத்திடம் இருக்கும் கோஹினூர் வைரத்தை இந்தியாவுக்கு திரும்ப அளிக்க வேண்டும் என்கிற கோரிக்கையை ஏற்க பிரிட்டிஷ் பிரதமர் டேவிட் கேமரன் மறுப்பு
 
 •  பரமேஸ்வரன் வழக்கில் வெற்றி
லண்டனில் உண்ணாவிரதம் இருந்தபோது இலங்கை தமிழ் இளைஞர் பரமேஸ்வரன் பர்கர் சாப்பிட்டதாக செய்தி வெளியிட்ட பத்திரிக்கைகளுக்கு எதிரான வழக்கில் வெற்றி பெற்றுள்ளார்
 
 •  சுத்தமான குடிநீர் அடிப்படை மனித உரிமை: ஐநா
சுத்தமான குடிநீரும், முறையான கழிப்பறை வசதியும் உலகிலுள்ள அனைவரின் அடிப்படை மனித உரிமை என்று ஐக்கிய நாடுகள் சபை அறிவித்துள்ளது
 
 •  முறிகண்டியில் மீள் குடியேற்ற சிக்கல்
இலங்கையின் வடக்கே பல இடங்களில் இராணுவத் தேவைக்காக நிலங்கள் கையகப்படுத்தப்படுவதால், இடம் பெயர நேர்ந்த ஆயிரக்கணக்கான மக்கள் தமது சொந்த இடங்களுக்கு திரும்புவது கேள்விக் குறியாகியுள்ளது
 
 •  கடற்படை முகாமுக்கு எதிர்ப்பு
அம்பாரை மாவட்டம் ஒலுவில் பிரதேசத்தில் கடற்படை முகாமொன்று அமைக்கப்பட்டிருப்பதை உள்ளூர் மக்கள் எதிர்க்கின்றனர்.
 
 •  பாக் விமான விபத்தில் 152 பேர் பலி
பாகிஸ்தானில் ஏற்பட்ட ஒரு விமான விபத்தில் அதிலிருந்த 152 பேரும் பலியாகியுள்ளனர். இந்த விமானம் கராச்சியிலிருந்து இஸ்லாமாபாதுக்கு சென்று கொண்டிருந்தது
 
 •  இந்தியாவில் பிரிட்டிஷ் பிரதமர்
இந்தியா வந்துள்ள பிரிட்டிஷ் பிரதமர் டேவிட் கேமரன் அவர்கள், இருநாட்டு உறவுகளை வலுப்படுத்துவதற்கும், பிரிட்டனில் புதிய வேலைவாய்ப்புக்களை உருவாக்குவதற்கும் இந்தப் பயணத்தில் முன்னுரிமை அளித்திருக்கிறார்
 
 •  நன்கு கல்வி கற்றவர்களுக்கு நினைவாற்றல் மங்குவதில்லை
நன்கு கல்வி கற்றவர்களுக்கு நினைவாற்றல் மங்கும் அறிகுறிகள் குறைவு என ஆய்வு ஒன்று தெரிவிக்கிறது.
 
 •  இரானுக்கு எதிராக புதிய தடைகள்
இரானின் அணுசக்தித்திட்டம் குறித்த விஷயத்தில், அந்த நாட்டுக்கெதிராக புதிய கடுமையான தடைகளை ஐரோப்பிய ஒன்றியம் முறையாக விதித்திருக்கிறது.
 
 •  ஐம்பதாவது வயதில் மீண்டும் மர்லின் ஒட்டே
மூன்று முறை ஒலிம்பிக் சாம்பியனாக இருந்துள்ள மார்லின் ஓட்டேய் தனது 50 ஆவது வயதில் மீண்டும் போட்டிகளில் பங்கு பெறப் போவதாக அறிவித்துள்ளார்.
 
 •  பாகிஸ்தானில் டிரோன் தாக்குதல்கள்
பாகிஸ்தானில் அமெரிக்க டிரோன் ஆளில்லா விமானங்கள் நடத்திவரும் தாக்குதல்களால் தமக்கு பாதிப்புகள் ஏற்பட்டுள்ளதாக தாலிபான்கள் ஒப்புக்கொண்டுள்ளனர்.
 
 •  கண்ணிவெடிகளை அகற்றும் பணியில் பெண்கள்
இலங்கையின் வன்னியில் கண்ணிவெடி விழிப்புணர்வு குறித்த நிகழ்ச்சியில், கண்ணிவெடி குறித்த விழிப்புணர்வு அனைவருக்கும் வேண்டும் என வலியுறுத்தல்.
 
 •  60 ஆண்டுகளுக்குப் பின்னர் அரியவகை தேவாங்கு
இலங்கையில் முற்றாக அழிவடைந்துவருவதாக கருதப்படும் அரிய வகை விலங்கினமொன்று இன்னும் உயிர்வாழ்வதை ஆய்வாளர்கள் முதற்தடவையாக உறுதிப்படுத்தியுள்ளனர்
 
 •  லண்டனில் ஏ ஆர் ரஹ்மான் இசை நிகழ்ச்சி
தனது உலகளாவிய இசைப் பயணத்தின் ஒரு பகுதியாக ஐக்கிய ராஜ்ஜியத்தின் இசை நிகழ்சிகளை நடத்த ஏ ஆர் ரஹ்மான் தற்போது லண்டன் வந்துள்ளார்.
 
 •  "ஆபத்தான ஆஸ்பெஸ்டாஸ்"
ஆஸ்பெஸ்டாஸை தொடர்ந்து பயன்படுத்தி வந்தால் அடுத்த இருபது ஆண்டுகளில் அதனால் ஏற்படும் இறப்புகள் பெரிய அளவில் அதிகரிக்கும் என வல்லுநர்கள் எச்சரித்துள்ளனர்
 
 •  'சந்தேக நபருக்கு விடுதலை' - உயர் நீதிமன்றம்
விடுதலைப்புலி உறுப்பினர் என்ற சந்தேகத்தின் பேரில் தடுத்துவைக்கப்பட்டிருந்த ஒருவரை விடுதலை செய்ய நடவடிக்கை எடுக்குமாறு உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
 
 •  இலங்கையில் ரோபேர்ட் பிளேக்
பான் கி மூனுக்கு ஆலோசனை வழங்குவதற்கான குழு இலங்கைக்கு நல்ல பலனைத் தரும் என்று நம்புவதாக அமெரிக்காவின் அரசுத்துறைத் துணைச் செயலர் ரொபேர்ட் பிளேக் அவர்கள் கூறியிருக்கிறார்.
 
 •  பாலகுமாரன், யோகி பற்றித் தெரியாது
விடுதலைப் புலிகள் இயக்கத்தின் முக்கியத் தலைவர்களாக இருந்த பாலகுமாரான், யோகி ஆகியோரின் மனைவிமார்களை சந்தித்துள்ள அமைச்சர் ட்யூ குணசேகர அதே நேரம் அவர்களின் நிலை பற்றித் தெரியாது என்கிறார்.
 
 •  'துன்புறுத்தல்கள்'-முன்னாள் போராளிகள் புகார்
இலங்கையில் இறுதிக்கட்டப் போரின் போது கைது செய்யப்பட்ட மற்றும் சரணடைந்த விடுதலைப் புலிகளின் உறுப்பினர்கள் கொடுமைகளுக்கு உள்ளாக்கப்படுவதாக அறிவித்துள்ளனர்.
 
 •  மேற்கு வங்க ரயில் விபத்தில் 60 பேர் பலி
இந்தியாவின் மேற்குவங்க மாநிலத்தில் திங்கட்கிழமை அதிகாலை ஏற்பட்ட ரயில் விபத்தில் 60 பேர் கொல்லப்பட்டார்கள். 90-க்கும் மேற்பட்டோர் காயமடைந்தார்கள்.
 
 •  ஊடகங்களின் செயற்திறனுக்காக அதிகாரசபை
இலங்கையில் ஊடகங்களின் தொழிற்சார் திறனை விருத்தி செய்யும் பொருட்டு புதிய 'ஊடக வழிகாட்டு நெறிமுறைகளை' அறிமுகப்படுத்த அரசாங்கம் தயாராகி வருகின்றது.
 
 •  வறுமை -இந்தியா முதலிடம்
ஆப்ரிக்காவின் 26 நாடுகளில் உள்ள வறியவர்களின் எண்ணிக்கையை விட எட்டு வட இந்திய மாநிலங்களில் உள்ளவர்களின் எண்ணிக்கை அதிகம் என்கிறது புதிய ஆய்வு
 
 •  சீமான் தேசிய பாதுகாப்புச் சட்டத்தின் கீழ்
வேலூர் சிறையில் அடைக்கப்பட்டிருந்த சீமானை தேசிய பாதுகாப்புச் சட்டத்தின் கீழ் சிறையில் அடைக்குமாறு தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.
 
 •  இந்திய ரூபாய்க்கு புதிய குறியீடு
சர்வதேச அளவில் இந்திய நாணயத்துக்கான அங்கீகாரம் பெறும் முயற்சியாக இந்திய ரூபாய்க்கு புதிய குறியீட்டுக்கு இந்திய நடுவணரசின் அமைச்சரவை வியாழக்கிழமை ஒப்புதல் அளித்திருக்கிறது.
 
 •  மாலத்தீவில் துன்புறுத்தலால் நாத்திகர் தற்கொலையா?
மாலத்தீவைச்சேர்ந்த நாத்திகர் ஒருவர், இஸ்லாமிய மதத்தை கடைபிடிக்காததால் தாம் பழிவாங்கப்பட்டதாக புகார் கூறிவந்த பின்னணியில் திடீரென தற்கொலை செய்துகொண்டிருக்கிறார்
 
 •  நூலாசிரியர் சிங்கப்பூரில் கைது
சிங்கப்பூர் அரசாங்கம் மரண தண்டனையை பயன்படுத்தும் விதம் குறித்து புத்தகம் ஒன்றை எழுதிய பிரிட்டிஷ் எழுத்தாளர் ஒருவரை சிங்கப்பூர் காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.
 
 •  "காமன்வெல்த் போட்டிகள் வீண்செலவு"
காமன்வெல்த் விளையாட்டுப் போட்டிகளுக்காக கோடிக்கணக்கான ரூபாய் செலவிடுவது வீண் செலவு என்று முன்னாள் அமைச்சர் மணி சங்கர் அய்யர் தெரிவித்துள்ளார்.
 
 •  கொசோவோ பிரிவினை சரி-சர்வதேச நீதிமன்றம்
செர்பியாவில் இருந்து கொசோவா சுதந்திரம் பெற்றதாக பிரகடனம் செய்தமை சர்வதேச சட்டத்தை மீறும் செயல் அல்ல என்று தி ஹேக்கில் இருக்கின்ற சர்வதேச நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.
 
 •  மன்னாரில் ஊடகவியலாளர் தாக்கப்பட்டுள்ளார்
மன்னாரில் அன்டனி மார்க் என்ற ஊடகவியலாளர் வியாழக்கிழமை இரவு வெள்ளைவானில் வந்த அடையாளம் தெரியாதவர்களினால் தாக்கப்பட்டுள்ளார்.
 
 •  ஐ நா ஆலோசனைக் குழு கூட்டம்
இலங்கையில் நடைபெற்றதாகக் கூறப்படும் போர் குற்றங்கள் குறித்து ஐக்கிய நாடுகள் சபையின் பொதுச் செயலர் பான் கீ மூனுக்கு ஆலோசனை கூற நியமிக்கப்பட்டுள்ள ஆலோசனைக் குழுவின் முதல் கூட்டம் நடைபெற்றுள்ளது.
 
 •  படிப்பை கைவிட நேர்ந்தவர்கள்
யுத்தம், சுனாமி மற்றும் பல்வேறு சமூகக் காரணங்களால் இலங்கையின் மட்டக்களப்பு மாவட்டத்தில் ஆயிரக்கணக்கான மாணவர்கள் தமது பள்ளிப்படிப்பை பாதியில் கைவிட்டுள்ளது பற்றிய விசேடத் தொடரின் இரண்டு பாகங்கள்.
 
 •  ததேகூ கருணாநிதி சந்திப்பு
இலங்கைத் தமிழ் தேசியக் கூட்டமைப்பைச் சேர்ந்த நாடாளுமன்ற உறுப்பினர்கள் தமிழக முதல்வர் கருணாநிதியை அவரது கோபாலபுரம் இல்லத்தில் இலங்கை நிலவரம் குறித்துப் பேசினர்.
 
 •  ஆப்கானிஸ்தான் மாநாடு
ஆப்கான் அதிபர் ஹமீட் கர்சாய் அவர்கள், 2014 ஆம் ஆண்டில் தமது நாட்டு படையினரே நாட்டின் பாதுகாப்புப் பொறுப்பை முற்றாக ஏற்பார்கள் என்று கூறியுள்ளார்.
 
 •  'சர்வகட்சி தீர்மானங்களை வெளியிடுவோம்'
சர்வகட்சி பிரதிநிதிகள் மாநாட்டின் இறுதி அறிக்கையை அரசாங்கம் தாமதமாக்கி வருவதால், அதனை வெளியிடப் போவதாக இரு உறுப்பினர்கள் கூறுகிறார்கள்.
 
 •  இந்தியா- பாக். பேச்சுவார்த்தை தோல்வியில்
இந்திய-பாகிஸ்தான் உயர்மட்ட பேச்சுவார்த்தைகளின் போது இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் நடந்துகொண்ட விதம் குறித்து, பாகிஸ்தானிய வெளியுறவுத்துறை அமைச்சர் விமர்சித்துப் பேசியுள்ளார்.
 
 •  விளம்பரம் -சச்சினை முந்தினார் தோனி
இந்திய கிரிக்கெட் அணியின் தலைவர் எம் எஸ் தோனி, விளம்பரங்களில் நடிப்பது தொடர்பாக 200 கோடி ரூபாய் வருமானம் தரும் ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டுள்ளார்.
 
 •  கிரிக்கெட் வீரர்களுக்கான புதிய விதி
விளையாட்டுப் போட்டிகளில் போதைப்பொருள் பாவனைத்தடுப்பு தொடர்பான புதிய ஒழுங்கு விதிகள் நடைமுறைக்கு வரும் தினத்தை ஐ.சி.சி அறிவித்துள்ளது.
 
 •  'வன்முறை பேச்சு': சீமான் கைது
வன்முறை மற்றும் பிரிவினையைத் தூண்டும் வகையில் பேசியதாக குற்றம்சாட்டப்பட்டு 'நாம் தமிழர்' இயக்கத் தலைவரும் தமிழ்த் திரைப்பட இயக்குநருமான சீமான் கைது செய்யப்பட்டுள்ளார்.
 
 •  ஆசியாவில் முதியோர் கவனிப்பு குறைவு
ஆசியாவில் இருக்கும் நாடுகளில் செல்வ வளம் அதிகரித்து வந்தாலும், அங்கு இறக்கும் தருவாயில் இருக்கும் மக்களை பல நாடுகள் போதுமான அளவில் கவனிப்பதில்லை என ஒரு ஆய்வு கூறுகிறது
 
 •  தமிழக அரசின் இடஒதுக்கீடு தொடரலாம்
தமிழக அரசு கல்வி மற்றும் வேலை வாய்ப்புகளில் 69 சதவீத இட ஒதுக்கீட்டை அளித்து வருவது தொடர்பான வழக்கை உச்ச நீதிமன்றம் முடித்துள்ளது.
 
 •  உலகக் கோப்பை: ஸ்பெயின் வெற்றி
உலகக் கோப்பை கால்பந்து போட்டியை ஸ்பெயின் வென்றுள்ளது. முதல் முறையாக அந்த அணி இந்த வெற்றியை பெற்றுள்ளது
 
 •  ‘பான் கீ மூனை எதிர்க்கிறோம்’-பிரதமர்
தனி மனிதராகிய பான் கீ மூன் இறைமையுள்ள இலங்கைக்கு எதிராக போர்க்குற்றம் பற்றிப் பேச முடியாது என்று இலங்கைப் பிரதமர் டி.எம்.ஜயரத்ன கூறியுள்ளார்.
 
 •  தமிழ்அகதிகள் குறித்து ஐநா புதிய கொள்கை
அகதி அந்தஸ்து கோரும் இலங்கைத் தமிழர்களின் விண்ணப்பங்கள் - இலங்கையின் பரந்துபட்ட அரசியல் நிலைமையைக் கணக்கில் எடுத்துக்கொண்டு பரிசீலிக்கப்பட்ட நிலைமை இனி இருக்காது என்று ஐ நா கூறுகிறது.
 
 •  விமல் வீரவன்ச உண்ணாவிரதம்
இலங்கைப் போர் குற்றங்கள் தொடர்பாக ஐ நாவின் பொதுச் செயலருக்கு ஆலோசனை வழங்க நிபுணர் குழு அமைக்கப்பட்டதை கண்டித்து அமைச்சர் விமல் வீரவன்ச காலவரையற்ற உண்ணாவிரதம் மேற்கொண்டுள்ளார்.
 
 •  தமிழர்கள் பொலிஸில் பதிய உத்தரவு
இலங்கையின் தலைநகர் கொழும்பின் சில பகுதிகளில் தமிழர்கள் மீண்டும் பொலிஸ் நிலையங்களில் பதிவு செய்ய வேண்டும் என்று அறிவிக்கப்பட்டதாக இலங்கை ஊடகங்களில் செய்திகள் வெளியாகியுள்ளன.
 
 •  பிரான்சில் பர்தாவுக்குத் தடை
பெண்கள் பொது இடங்களில் முழுமையான முகத்திரையை அணிவதை தடை செய்யும் சட்டத்துக்கு பிரெஞ்சு நாடாளுமன்றம் ஒப்புதல் அளித்திருக்கிறது.
 
 •  சச்சின் 48 ஆவது சதமடித்தார்
சச்சின் டெண்டூல்கர் தனது 48 ஆவது டெஸ்ட் சதத்தை அடித்துள்ளார். வீரேந்தர் ஷேவாக் ஒரு ஓட்டத்தில் சதத்தை தவற விட்டார்
 
 •  வளர்ச்சி பாதையில் கிழக்கு மாகாணம்?
இலங்கையில் கிழக்கு மாகாணம் அரசாங்கத்தினால் விடுவிக்கப்பட்டு மூன்று வருடங்கள் ஆகியுள்ள போதிலும் அங்கு முற்றிலுமாக இயல்பு வாழ்க்கை திரும்பவில்லை என பலதரப்பினர் கூறுகிறார்கள்.
 
 •  சாதனை சாத்தியமானது எப்படி?
சர்வதேச கிரிக்கெட் உலகில் முத்தையா முரளிதரனின் சாதனை தனித்தன்மை மிக்கது என்றும், முக்கியத்துவம் வாய்ந்தது என்றும் கூறுகிறார் இந்தியாவின் முன்னாள் சுழற்பந்து வீச்சாளர் எரபள்ளி பிரசன்னா
 
 •  செய்தி உண்மையில்லை - பாகிஸ்தான்
தாலிபான்களுக்கு தீவிர ஆதரவாக பாகிஸ்தானின் உளவுப்படை செயற்பட்டது என்ற குற்றச்சாட்டுகளை பாகிஸ்தான் கடுமையாக நிராகரித்துள்ளது.
 
 •  பிற்பாடுதான் மதமாற்றம்: உமா சங்கர்
இந்திய அரசுப் பணி வேலைக்கு தேர்வு எழுதும்போது இந்து தலித்தாகத்தான் இருந்ததாகவும் பின்னர்தான் கிறிஸ்தவராக மதம் மாறியுள்ளதாகவும் பதவி இடை நீக்கம் செய்யப்பட்டுள்ள உமா சங்கர் தெரிவித்துள்ளார்.
 
Updated: 977 minutes ago
Disclaimer Copyright Terms of Service & Privacy Policy Sitemap Great Links
Bookmark and Share